பயங்கரவாத தடைச்சட்டம்: யாழ்ப்பாணத்தில் இன்று கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு
Mayoorikka
3 years ago

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் இன்று கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை இடம்பெற்றது.
இதில் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், பொது அமைப்புக்களுடன் பொது பிரதிநிதிகளும் கையெழுத்திட்டனர்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கக் கோரிய கையெழுத்து போராட்டம், முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த வாரம் ஆரம்பமானது.
கையெழுத்து போராட்டம் நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிலையில் இன்று யாழ்ப்பாண மத்திய பஸ் நிலைய முன்றலில் இடம்பெற்றது.



