5 மாதங்களுக்கு மூடப்படவுள்ள ரயில் பாதை
Mayoorikka
3 years ago

அனுராதபுரம் முதல் வவுனியா வரையான ரயில் பாதை 5 மாதங்களுக்கு மூடப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதனடிப்படையில், எதிர்வரும் 5 ஆம் திகதியிலிருந்து 5 மாதங்களுக்கு மூடப்படவுள்ளது.
இதனால், யாழ்தேவி மற்றும் இலக்கம் 17 ரயில் பயணிகளுக்காக வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் செல்வதற்காக ரயில்கள் ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பயணிகளின் போக்குவரத்திற்காக அனுராதபுரத்திலிருந்து வவுனியா வரை பஸ் சேவைகளும் ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



