பிரேசிலில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 18 பேர் பலி

தென் அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோடி ஜெரினோ மாகாணத்தில் கடந்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக அம்மாகாணத்தில் மலைப்பகுதியில் அமைந்துள்ள பெட்ரொபொலிஸ் உள்ளிட்ட நகரங்களில் நேற்று ஒரேநாளில் அதிகனமழை கொட்டித்தீர்த்தது.
இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். நிலச்சரிவால் பல்வேறு வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும், நகரின் பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில், ரியோடி ஜெனிரோவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் மாயமாகியுள்ளனர்.
வெள்ளம், நிலச்சரிவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு நடவடிக்கையில் பேரிடர் மீட்புகுழுவினர் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர். கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் பாதிப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.



