11 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு 19 வருட சிறை

Prathees
3 years ago
11 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு 19 வருட சிறை

11 வயது சிறுவனை ஏமாற்றியமை, கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக குற்றவாளி ஒருவருக்கு  19 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 15,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.

மொனராகலை மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்ததுடன்,  பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 100,000 ரூபா நட்டஈடாக வழங்குமாறும் உத்தரவிட்டார்.

ஹம்பேகமுவ பகுதியில் வசிக்கும் இரத்தினபுரியைச் சேர்ந்த பரணகமகே விஜேரத்ன எனப்படும் சுதா (59 வயது ) என்ற நபருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

19/12/2011 அன்று நோய்வாய்ப்பட்ட தந்தைக்கு பரசிட்டமோல் மாத்திரைகளை  வாங்கி வருவதற்காக கடைக்கு துவிச்சக்கரவண்டியில் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த 11 வயது சிறுவனை எள் வயல் ஒன்றின் அருகில் உள்ள இடத்திற்கு அழைத்துச் சென்று துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில்  சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீண்ட விசாரணைக்குப் பிறகு, குற்றஞ்சாட்டப்பட்டவர்  குற்றங்களையும் ஒப்புக்கொண்டதையடுத்து குற்றவாளிக்கு ஐயாயிரம் ரூபாய் அபராதத்துடன் அபராதத்தை செலுத்தாவிட்டால் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், மூன்று ஆண்டுகள் லேசான சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

கடுமையான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் மேலும் குற்றவாளிக்கு ரூ.10,000 அபராதமும், கடின உழைப்புடன் 14 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டசிறுவனுக்கு  100,000 ரூபா நட்டஈடாக வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!