பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபர் 12 வருடங்களின் பின்னர் விடுதலை!
Mayoorikka
3 years ago

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் – கரவெட்டியை சேர்ந்த ஒருவர் 12 வருடங்களின் பின்னர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் சந்திம லியனகேவினால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இறுதி யுத்த காலத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு கொழும்பில் நிதி சேகரித்து வழங்கிய குற்றச்சாட்டில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி கந்தப்பு ராஜசேகர் என்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
கரவெட்டியை சேர்ந்த 56 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டு 12 வருடங்களின் பின்னர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமையால், அவரை இன்று விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.



