எவருக்கும் எந்த வகையிலும் எதிர்ப்பு தெரிவிக்க அனுமதி வழங்க வேண்டும்: ஜனாதிபதி கோட்டாபய

Mayoorikka
3 years ago
எவருக்கும் எந்த வகையிலும் எதிர்ப்பு தெரிவிக்க அனுமதி வழங்க வேண்டும்:  ஜனாதிபதி கோட்டாபய

போராட்டக்காரர்கள் மற்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர் புகை பிரயோகிக்க வேண்டாம் என பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

நேற்று (14) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்தார்.

எவருக்கும் எந்த வகையிலும் எதிர்ப்பு தெரிவிக்க அனுமதி வழங்க வேண்டும் எனவும் இது தொடர்பில் மக்கள் தீர்மானம் எடுப்பார்கள் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

போராட்டக்காரர்கள் மற்றும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக பொலிஸார் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் சரத் வீரசேகர அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்த கருத்தை கவனத்தில் எடுத்த  ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

போராட்டக்காரர்களுக்கு எதிராக அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையானால் தொடர்ந்தும் வேலைநிறுத்தம் மற்றும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் சரத் வீரசேகர அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!