பிரான்சில் திடீரென பற்றியெரிந்த கட்டிடம்- இரு குழந்தைகள் உட்பட 7 பேர் பலி!

#world_news
Nila
3 years ago
பிரான்சில் திடீரென பற்றியெரிந்த கட்டிடம்- இரு குழந்தைகள் உட்பட 7 பேர் பலி!

பிரான்சிலுள்ள பாரிய கட்டிடமொன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரான்சின் தென்பகுதியில் உள்ள மளிகைப்பொருட்கள் விற்பனையக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தீ விபத்தில் இருவரை காணவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரான்சின் பைரெனிஸ் ஓரியென்டெல்ஸ் என்ற இடத்தில் நேற்று (14) அதிகாலை 2 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இரண்டு மாடி கட்டிடத்தின் தரை தளத்தில் ஏற்பட்ட திடீரென வெடிப்பு ஏற்பட்டு தீ பரவி அருகில் உள்ள கட்டிடங்களுக்கும் பரவியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

எனினும், வெடிப்புக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.

இதேவேளை, எரிவாயு கொள்கலன்களின் வெடிப்பே இதற்கான காரணம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!