மிகப்பெரிய மதுபான தொழிற்சாலையை நிர்மாணிக்க கந்தளாயில் உள்ள 20,000 ஏக்கர் நிலம் சிங்கப்பூருக்கு
Prathees
3 years ago

ஆசியாவிலேயே மிகப்பெரிய மதுபான தொழிற்சாலையை நிர்மாணிப்பதற்காக கந்தளாய் சீனி தொழிற்சாலைக்கு சொந்தமான 20,000 ஏக்கர் நிலம் விற்கப்படவுள்ளதாக தேசிய அமைப்புகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நிதியமைச்சர் அண்மையில் அமைச்சரவைக்கு மகஜர் ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அழைப்பாளர் குணதாச அமரசேகர, வசந்த பண்டார, சட்டத்தரணி கல்யாணந்த திராணகம, பொறியியலாளர் கபில பெரேரா ஆகியோர் இது தொடர்பில் இன்று (15ஆம் திகதி) விசேட வெளிப்படுத்தலை மேற்கொள்ள உள்ளனர்.



