அம்பாந்தோட்டையில் பெரும் போகத்தில் 12,865 ஏக்கர் நெற்செய்கை மேற்கொள்ளப்படவில்லை என தெரியவந்துள்ளது.
#SriLanka
#rice
#Hambantota
Mugunthan Mugunthan
3 years ago

2021-2022 மகா பருவத்தில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நெல் செய்கையின் பரப்பளவு 5,146 ஹெக்டேர் அல்லது 12,865 ஏக்கரால் குறைந்துள்ளது.
அந்த நிலங்களில் வாழை உள்ளிட்ட மேலதிக பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட விவசாயப் பணிப்பாளர் டி.எச்.அமரசிங்க தெரிவித்தார்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மொத்த நெல் சாகுபடி இலக்கு 36,887 ஹெக்டேயர் ஆகும். ஆனால் ஜனவரி இறுதி வரை 31,741 ஹெக்டேரில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டுள்ளது.



