இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை
#Canada
Nila
3 years ago

கனடாவில் வேலை வாய்ப்பு என சமூக ஊடகங்களில் இடம்பெற்று வரும் போலியான ஆட்சேர்ப்பு மோசடி தொடர்பில் இலங்கையில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் உயர் ஸ்தானிகராலயம் தனது ஒரு ட்விட்டர் செய்தியில் தெரிவித்திருப்பதாவது,
"கனடா அரசாங்கத்தின் ஆட்சேர்ப்பு பிரச்சாரம் - 2022" பற்றி சமூக ஊடகங்களில் பரப்பப்படும் விளம்பரங்கள் தவறானவை என்று கூறியது.
இந்த பிரச்சாரம் பொய்யானது என வலியுறுத்திய இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயம், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும், மோசடிகளில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறும் எச்சரித்துள்ளது.



