வெளிநாட்டுக்காரரை குறிவைத்துக் கடித்த விசர் நாய். மேலும் 10 பேரை தன் பல்லுக்கு பதம்பார்த்ததாம்.

Keerthi
3 years ago
வெளிநாட்டுக்காரரை குறிவைத்துக் கடித்த விசர் நாய். மேலும் 10 பேரை தன் பல்லுக்கு பதம்பார்த்ததாம்.

யாழ்.நகர் மத்திய பகுதியில் இன்றைய தினம் கட்டாக்காலி நாய் ஒன்று வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்டவர்களை  கடித்துள்ளது.

யாழ்.நகர் மத்தியில் கஸ்தூரியார் வீதி , மின்சார நிலைய வீதி என்பனவற்றில் இன்று வியாழக்கிழமை மதியம் முதல் மாலை வரையிலான நேரத்தினுள் 10க்கும் மேற்பட்டவர்களை நாய் கடித்துள்ளது.

அதேவேளை அப்பகுதிகளில் சுமார் 10க்கும் மேற்பட்டவர்களை குறித்த நாய் கடித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபனுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் , குறித்த நாயினை மாநகர சபை ஊழியர்கள் ஊடாக பிடிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் , நாய் தொடர்பிலான தகவல்கள் தெரியாமையால் நாயினை பிடிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.

குறித்த நாய் தொடர்பிலான தகவல்கள் தெரிந்தவர்கள் அல்லது மாநகர சபைக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!