பிரித்தானியாவில் 16 விநாடிகள் முகக்கவசத்தை கழட்டியதற்காக 2000 பவுண்ட் அபராதம் விதித்த பொலிஸார்!

பிரித்தானியாவில் 16 விநாடிகள் முகக்கவசத்தை கழட்டியதற்காக நபர் ஒருவருக்கு 2000 பவுண்ட் அபராதம் விதித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கிறிஸ்டோபர் என்ற பிரித்தானியர் B என்ட் M எனப்படும் என்ற சுப்பர் மார்க்கெட்டில் முகக் கவசம் அணிந்து, பொருட்கள் கொள்வனவு செய்துள்ளார்.
எனினும் சுகயீனம் காரணமாக சிறிது நேரம் முகக் கவசத்தை அகற்றி விட்டு மீளவும் அணிந்துள்ளார். அதற்கு தண்டனையாக 2000 பவுண்ட் அபராதம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
தன்னுடைய முழு ஊதியத்தை வைத்து கூட தன்னால் அந்த அபராத தொகையை செலுத்த முடியாது என குறித்த இளைஞன் குறிப்பிட்டுள்ளார். 16 விநாடிகள் மாத்திரமே அவர் முகக் கவசத்தை அகற்றியுள்ளார்.
அந்த நேரத்தில் சுப்பர் மார்க்கெட்டிற்குள் நுழைந்த பொலிஸார் அவர் முகக் கவசம் இல்லாமல் இருப்பதை அவதானித்துள்ளனர். தனக்கு உடல் நிலை சரியில்லாததால் சில விநாடிகள் மாத்திரமே முகக் கவசத்தை நீக்கியதாக கிறிஸ்டோபர் தனது நிலையை விளக்கியுள்ளார்.
எனினும் அவருக்கு 2000 பவுண்ட் அபராதம் விதிக்க பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.



