உலகளவில் ஒமைக்ரோன் பரவலானது புதிய உருமாறிய வகையாக உருவாக வழிவகுக்கும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

Reha
3 years ago
உலகளவில் ஒமைக்ரோன் பரவலானது புதிய உருமாறிய வகையாக உருவாக வழிவகுக்கும் -  உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

உலகளவில் ஒமைக்ரோன் பரவலானது புதிய உருமாறிய வகையாக உருவாக வழிவகுக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் கொரோனா தொழில்நுட்ப ஆய்வு பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ் (Maria van Kerkov) வெளியிட்டுள்ள தகவலின் படி, இன்னும் சில காலத்திற்கு கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை உலக மக்கள் தொடரவேண்டும்.

கொரோனா திரிபுகளில் ஒமைக்ரோன் கடையாக இருக்காது . சில திரிபுகள் மக்களை தாக்க வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.

அத்துடன் கொரோனாவின் அடுத்த திரிபு ஒமைக்ரோனைவிட வேகமாக தொற்றும் தன்மை கொண்டதாக இருக்கும் என்றும், அதற்கு பிறகும் சில திரிபுகள் ஏற்படக்கூடும் என்றும் தெரிவித்தார்.

மேலும் அடுத்தடுத்த திரிபுகளுக்கு எதிராக தடுப்பூசிகளின் எதிர்ப்புத் திறன் குறையக் கூடும் என்றும் ஆனாலும் நோய்த் தொற்று ஆபத்தையும், உயிரிழப்பையும் தடுப்பூசி பெருமளவு தடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!