கடன் மீள் கட்டமைப்பு தொடர்பில் முதலீட்டாளர்களுடன் கலந்துரையாட வேண்டிய அவசியம் இல்லை – இலங்கை மத்திய வங்கி
Mayoorikka
3 years ago

கடன் மீள் கட்டமைப்பு தொடர்பாக முதலீட்டாளர்களுடன் கலந்துரையாட வேண்டிய அவசியம் இல்லை என்று இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை விடுத்து தெரிவித்துள்ளது.
எதிர்பார்க்கப்பட்ட அந்நியச் செலாவணி வரவுகள் மற்றும் வெளிநாட்டு கையிருப்புகளின் உருவாக்கம் என்பவற்றினூடாக திறைசேரி முறிகளின் கொடுப்பனவுகளை உரிய வகையில் செலுத்த முடியும் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.



