இலங்கையில் ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல் !!
#SriLanka
#Basil Rajapaksa
Nila
3 years ago

ஊழியர் சேமலாப நிதியத்தை அரசாங்கம் தனக்கு விரும்பியவாறு பயன்படுத்த முடியாது என ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.அரசாங்கமும் மத்திய வங்கியும் உழைக்கும் மக்களின் ஊழியர் சேமலாப நிதியத்தை பாதுகாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் இந்த புதிய வரியை அறிமுகம் செய்ததன் நோக்கம் மோசடிகளில் ஈடுபடவேயாகும் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ச ஒரு லட்சம் வேலைத் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும், அந்த திட்டங்களை முன்னெடுக்கவும் ஊழல் மோசடிகளில் ஈடுபடவும் இந்த வரியை பயன்படுத்துவார்கள் எனவும் சுனில் ஹந்துனெத்தி குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தப் பணத்தைக் கொண்டு கிராமத்தில் பாலமொன்றை செய்து, தேர்தலுக்கு அரசாங்கம் ஆயத்தமாகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.



