அதிவேக நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களை ஆறு மாதங்களுக்குள் தடுப்பதற்கு நடவடிக்கை!
Reha
3 years ago

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களை ஆறு மாதங்களுக்குள் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சிந்தக குணரத்னவுக்கு நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும், இலங்கையில் தற்போது வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கும் அவர் , 2020ஆம் ஆண்டைவிட 2021ஆம் ஆண்டு வீதி விபத்துகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது.
அதிவேக நெடுஞ்சாலைகளில் அதிகளவான விபத்துக்கள் சாரதிக்கு உறக்கம் ஏற்பட்டதன் காரணமாக நிகழ்ந்துள்ளன. இதனால் அதிவேக வீதிகளில் ஓய்வறைகளை அமைப்பது தொடர்பில் அமைச்சர் கவனம் செலுத்தியுள்ளார்.



