புதையல் தோண்டும் செயற்பாட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது! பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிப்பு
Reha
3 years ago

களுத்துறை, தெபுவன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிச்சர் பெலஸ்வத்த பிரதேசத்தில் புதையல் தோண்டும் செயற்பாட்டில் ஈடுபட்ட இருவரைப் பொலிஸார் நேற்றுக் கைதுசெய்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
கிரிவத்துகுடுவ, ஹோமாகம ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 52 வயதுகளையுடைய இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
புதையல் தோண்டுவதற்கான பொருட்கள், சந்தேகநபர்கள் பயணித்த ஜீப் ரக வாகனம், மூன்று தொலைபேசிகள் என்பவற்றையும் பொலிஸார் இதன்போது கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



