பதுளையில் ஒன்றரை வயது குழந்தைக்குக் கொரோனா!
#SriLanka
#Corona Virus
Nila
3 years ago

பதுளை, ஹப்புத்தளையில் ஒன்றரை வயது ஆண் குழந்தைக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனப் பதுளை மாவட்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சங்கத்தின் உப தலைவர் சுப்பிரமணியம் சுதர்சன் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
பதுளை, ஹப்புத்தளையில் 28 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் குறித்த குழந்தை உள்ளிட்ட 18 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த குழந்தை கொரோனா சிகிச்சை நிலையத்துக்குத் தாயுடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
குறித்த குழந்தை தவிர்ந்த ஏனைய 17 பேரும் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று பதுளை மாவட்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சங்கத்தின் உப தலைவர் மேலும் கூறினார்.



