2021 ஆம் ஆண்டைப் பற்றிய ஒரு முக்கிய தகவலை நாசா வெளியிட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு வெப்பநிலை தரவு சேமிப்பு வரலாற்றில் ஆறாவது வெப்பமான ஆண்டாக பதிவாகியுள்ளது.
புவி வெப்பமயமாதல், பூமியின் வெப்பநிலையில் ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரிப்பு காரணமாக, உலகெங்கிலும் எதிர்மறையாக வானிலை மாற்றம் ஏற்படலாம். ஆனால், இதனை நம்மால் தடுத்து நிறுத்த முடியும் என நாசாவின் கோடார்ட் இன்ஸ்டிடியூட் பார் ஸ்பேஸ் ஸ்டடீஸின் இயக்குனர் கவின் ஷ்மிட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பூமியின் தற்போதைய வெப்பநிலை மோசமான நிலையை அடைந்துள்ளது. ஆனால் கிரீன்ஹவுஸ் வாயுக்கள், குறிப்பாக கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை நிறுத்துவது போன்ற சில முக்கிய மாற்றங்களை செய்வதன் மூலம் அதன் விளைவுகளை நம்மால் குறைக்க முடியும்.
அறிவியலின் சில பகுதிகள் உதவியாக இருப்பதால், அது நமக்கு நம்பிக்கையைத் தருகிறது என்று நான் நினைக்கிறேன்.
தற்போது இருக்கும் வெப்பநிலை அதிகரிப்பை நாம் எதிர்காலத்தில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் மூலம் குறைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.



