இலங்கையில் நீர் விநியோகம் தடைபட்டுள்ளமைக்கான காரணம் வெளியானது

Prathees
3 years ago
இலங்கையில் நீர் விநியோகம் தடைபட்டுள்ளமைக்கான காரணம் வெளியானது

கடந்த 2ஆம் திகதி முதல் பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குண்டசாலை, பலகொல்ல, பல்லகெலே பிரதேசங்களில் கடந்த 2ஆம் திகதி முதல் நீர்வெட்டு காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்ததன் காரணமாக பலகொல்ல சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீரை வழங்க முடியாதுள்ளதாக விக்டோரியா நீர்த்தேக்கத்தின் பொறுப்பதிகாரி ஒருவர் தெரிவித்தார்

விக்டோரியா நீர்த்தேக்கத்திலிருந்து மின் உற்பத்தி மற்றும் பயிர்ச்செய்கைக்காக நீர் திறந்துவிடப்படுவதால் அதன் நீர்மட்டம் குறைந்து பலகொல்ல நீரேற்று நிலையத்திற்கு நீர் வழங்க முடியாமல் செயலிழந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நீர் விநியோகம் நிறுத்தப்பட்டமையால் தாம் மேலும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!