இலங்கை மக்களுக்கு நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை விடுத்துள்ள அறிவிப்பு !
Nila
3 years ago

இலங்கையில் நீர் விநியோகம் மட்டுப்படுத்தபடுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவுறுத்தியுள்ளது .
தற்போதைய காலநிலை காரணமாக பிரதான நீர் ஆதாரங்களில் நீர் மட்டத்தில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி காணப்படுகின்றது.
தற்போது நிலவும் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்வரும் நாட்களில் நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படலாம் என அந்த சபை எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் நீரை பயன்படுத்துவதுடன், அதனை வீண் விரயமாக்குவதனை தவிர்க்குமாறும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.



