பிரித்தானியாவில் சிங்கக் கொடியை எரித்த பிரித்தானியாவின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுத் தொண்டர்கள். (புகைப்படங்கள் உள்ளே இணைப்பு)
Keerthi
3 years ago

பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதுவராலயத்தின் முன் நடைபெற்ற கரி நாள் போராட்டத்தின் போது சிறிலங்காவின் அடையாளமான சிங்கக் கொடி வீதியில் வைத்து எரிக்கப்பட்டது.
அத்தோடு, தூதரகத்தின் மாடியில் தமிழர் தாயகத்தின் தேசியக்கொடி பறக்க விடப்பட்டிருந்ததையும் இந்தப்போராட்டத்தில் அவதானிக்க முடிந்துள்ளது.
பிரித்தானியாவின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் போராட்டம் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டவர்கள், சிறிலங்காவின் சுதந்திர நாளுக்கெதிரான பதாதைகளை தாங்கியபடி கண்டனக் கொட்டொலிகளையும் எழுப்பியிருந்தனர்.
இப்படியான ஆற்ப்பாட்டங்கள் முன்னைய வருடங்களிலும் நடைபெற்றதும் அறிந்ததே.




