ஒரே நேரத்தில் சிறுவனை தாக்கிய மூன்று வகை கொரோனா – இஸ்ரேலில் அதிர்ச்சி

#Corona Virus
Prasu
3 years ago
ஒரே நேரத்தில் சிறுவனை தாக்கிய மூன்று வகை கொரோனா  – இஸ்ரேலில் அதிர்ச்சி

உலகம் முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் தொடர்ந்து வரும் நிலையில் இஸ்ரேலி சிறுவனை 3 கொரோனாக்கள் ஒரே நேரத்தில் தாக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த டிசம்பர் 2019 முதலாக பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் வெவ்வேறு வேரியண்டுகளால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக உலகம் முழுவதும் பல கோடி மக்களை பாதித்துள்ளதுடன், பலியையும் அதிகப்படுத்தியுள்ளது. கொரோனாவை தடுக்க உலக நாடுகள் தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் இஸ்ரேலை சேர்ந்த 11 வயது சிறுவனுக்கு கொரோனா அறிகுறிகள் தெரிய வந்ததால் சோதனை மேற்கொண்டுள்ளனர். அதில் சிறுவனுக்கு ஆல்பா, டெல்டா, கொரோனா உள்ளிட்ட மூன்று வகை கொரோனா பாதிப்புகளும் இருப்பது தெரியவந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வகையான தொற்று மிகவும் அரிது என கூறியுள்ள மருத்துவர்கள் தற்போது தீவிர சிகிச்சைக்கு பின் சிறுவன் நலமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!