ஒமிக்ரோன் தொற்றால் நடந்த முதல் மரணம்: கடும் எச்சரிக்கை நிலை விடுத்த நாடு

#Corona Virus #Omicron
Mayoorikka
1 year ago
ஒமிக்ரோன் தொற்றால் நடந்த முதல் மரணம்: கடும் எச்சரிக்கை நிலை விடுத்த நாடு

இங்கிலாந்தில் ஒமிக்ரோன் வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் ஒமிக்ரோன் கொவிட் தொற்றுக்கு உள்ளான ஒருவர் அந்நாட்டில்  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒமிக்ரோன் தொற்றினால் பதிவான முதல் மரணம் இதுவாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

 இங்கிலாந்தில் நேற்று ஒரே நாளில் 1,239 பேர் ஒமிக்ரோன் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம்,  ஒமிக்ரோன் தொற்று மொத்த எண்ணிக்கை 3,137 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக எச்சரிக்கை நிலை மூன்றில் இருந்து நான்காக உயர்த்தி அந்நாட்டு அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு