வருங்கால சந்ததியினருக்கு புகைபிடிக்க தடை - நியுசிலாந்தில் சட்டம்.

நியுசிலாந்து அரசாங்கம் புகைபிடித்தலை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு புதிய சட்டமுறையை கொணர்ந்துள்ளது.
இந்த சட்டம், 14 வயது மற்றும் அதற்கு குறைவானவர்கள் வாழ்நாள் முழுவதும் புகை பிடிப்பதை தடை செய்கிறது.
அடுத்த ஆண்டு முதல் அமுலுக்கு வரும் இந்த சட்டம் ஆண்டுதோறும் சிகரெட் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயதை அதிகரிக்க வகை செய்யும்.
இந்த சட்டம் அமுலுக்கு வந்து, 65 ஆண்டுகளுக்கு பிறகும் கடைகளுக்கு சென்று சிகரெட் வாங்க முடியும். ஆனால் அவர்கள் தங்களுக்கு 80 வயதாகி விட்டது என்பதற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும்.
ஆனால் நடைமுறையில் பல தசாப்தங்களுக்கு முன்பாகவே சிகரெட் பிடிக்கும் பழக்கம் மறைந்து விடும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
இதன்மூலம் 2008ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்தவர்கள் சிகரெட்டுகளோ, பிற புகையிலை பொருட்களோ தங்கள் வாழ்நாளில் வாங்க முடியாமல் போய் விடும்.
புகைபிடிப்போர் விகிதத்தினை 5 சதவீதமாக குறைக்கவே இச்சட்டம் வழிகாட்டு



