ஜனநாயக உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் காந்தி அடிகளை பாராட்டி பேச்சு!

#world_news
ஜனநாயக உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் காந்தி அடிகளை பாராட்டி பேச்சு!

அமெரிக்க தலைமையில் ஜனநாயக உச்சி மாநாடு என்று முதன் முறையாக நடத்தப்பட்டது. நேற்று முன் தினம் நடைபெற்ற இந்த மாநாட்டில் 110 நாடுகள் கலந்து கொண்டன.

ஜனநாயக உச்சி மாநாட்டின் தொடக்க நாளில் கலந்துகொண்டு உரையாற்றிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மகாத்மா காந்தியடிகள் மற்றும் நெல்சன் மண்டேலா ஆகியோரை நினைவுகூர்ந்து பேசினார். அமெரிக்காவின் சமூக உரிமை செயல்பாட்டாளர் மறைந்த ஜாண் லீவிஸ் குறித்தும் பைடன் தனது உரையில் பேசினார். ஜாண் லீவிஸ்,  மகாத்மா காந்தியடிகள் மற்றும் நெல்சன் மண்டேலா ஆகியோரை முன்னுதாரணமாக கொண்டு செயல்பட்டவர் என்று புகழாரம் சூட்டினார்.

ஜாண் லீவிஸ் வாஷிங்டனில் 1963ம் ஆண்டு நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியை ஒருங்கிணைத்த முக்கிய தலைவர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.அவர்  அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் 1987ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை அரும்பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜோ பைடன் ஆற்றிய காணொலி உரையில், “நாம் நீதிக்காக நிற்க வேண்டும். சுதந்திரமான பேச்சு, சுதந்திரமான மாநாடு, சுதந்திரமான பத்திரிகை மற்றும் மத சுதந்திரம் போன்றவற்றிற்காகவும்,  ஒவ்வொரு தனிநபருக்கும் உள்ளார்ந்த மனித உரிமைகள் கிடைத்திடவும் துணை நிற்க வேண்டும்” என்று உரையாற்றினார்.

ஜனநாயக நாடுகள் சந்திக்கும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும், இந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளை எதிர்கொள்தல் குறித்து தலைவர்கள் விரிவாக கலந்துரையாட இந்த உச்சிமாநாடு வழிவகுக்குத்துள்ளது என அமெரிக்கா தெரிவித்தது.      

இந்த மாநாட்டில் பங்கேற்க இந்தியா, பாகிஸ்தான், ஈராக், தைவான் உள்பட 110 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, சீனா, ரஷியா, துருக்கி, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க அழைப்பு விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!