புனித் ராஜ்குமார் குடும்ப மருத்துவருக்கு போலீஸ் பாதுகாப்பு
#Actor
Keerthi
3 years ago

கன்னடத்தில் புகழ்பெற்ற நடிகரும், பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகனுமான புனித் ராஜ்குமார் சில தினங்கள் முன்பாக மாரடைப்பால் காலமானார். இவர் உயிரிழந்த சம்பவம் இந்திய திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்நிலையில் அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சமூகவலைதளங்களில் சிலர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். இந்த பதிவு குழப்பத்தை ஏற்படுத்த, இப்போது புனித்தின் குடும்ப மருத்துவரின் வீடு மற்றும் மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.



