DNA சோதனை மூலம் 50 சகோதரர்கள் இருப்பதை அறிந்து இளம்பெண்

Keerthi
4 years ago
DNA சோதனை மூலம் 50 சகோதரர்கள் இருப்பதை அறிந்து இளம்பெண்

அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் மரபணு சோதனை மூலம் தனக்கு 50 சகோதரர்கள் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

2018ம் ஆண்டு அந்த இளம்பெண், தனது பூர்வீகம் குறித்து தெரிந்து கொள்வதற்காக டி.என்.ஏ எனப்படும் மரபணு சோதனையை மேற்கொண்டிருக்கிறார். ஆனால் அந்த சோதனை முடிவு கிடைத்த பின்னர் தான் அவருக்கு சிக்கலே தொடங்கியது.

சிறிது நாட்களில் இசியை தொடர்பு கொண்ட ஒரு பெண்மணி உங்களது விவரங்களை கூற முடியுமா ஏனென்றால் என்னுடைய மகளுக்குள், உங்களுக்கு ஒரே டி.என்.ஏ தான் இருக்கிறது என சொல்லியிருக்கிறார்.

ஆனால், தான் ஒரு மரபணு கொடையாளர் மூலம் பிறந்த குழந்தை என அந்த டிக் டாக் பிரபலத்துக்கு தெரிந்துள்ளது. இதனையடுத்து அந்த பெண்மணி கூறியவாறு அவருடைய மகளும், தானும் ஒரே உயிரணு கொடையாளர் மூலம் பிறந்த சகோதரிகளாக இருக்கக் கூடும் என யூகித்தார்.

இது தவிர இசியின் தாய் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்தவர் என்பதால் அவரது சகோதரிகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது. தனக்கு, வேறு யாரேனும் மரபணு ரீதியில் சகோதர்கள் இருக்கிறார்களா என தெரிந்துகொள்வதற்காக பிரைவேட் ஃபேஸ்புக் குரூப் ஒன்றை தொடங்கி தனது சகோதரிகளுக்கு லிங்கை அனுப்பி வைத்திருக்கிறார் இசி.

இந்த ஃபேஸ்புக் குரூப்பின் மூலம் தனக்கு 50 சகோதர சகோதரிகள் இருப்பதை அறிந்து அந்த டிக் டாக் பிரபலம் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். இந்த எண்ணிக்கை மேலும் உயரவும் வாய்ப்பிருக்கிறது.

தனது வீடியோவில் இந்த தகவல்களை தெரிவித்துள்ள இசி மரபணு ரீதியிலான தன்னுடைய சகோதர, சகோதரிகளுடன் உறவை பகிர்ந்து கொள்ள பயமாக இருப்பதாகவும், ஒரு வேளை எதிர்காலத்தில் என்னுடைய சகோதரருடனே டேட்டிங் செய்துவிடுவேனோ என்ற அச்சமும் இருந்து வருவதாக கூறியிருக்கிறார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!