பயணக் கட்டுப்பாடு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட முக்கிய தகவல்
Prabha Praneetha
3 years ago

ஒக்டோபர் 31ஆம் திகதி அதிகாலை 4.00 மணிக்குப் பின்னர் தற்போது நடைமுறையில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று (29) காலை காணொளி தொழில்நுட்பம் ஊடாக கொவிட் தடுப்புக் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.



