இலங்கை ரக்பி ஜாம்பவான் சந்திரிஷன் பெரேரா காலமானார்
#SriLanka
#Death
Prasu
3 years ago

இலங்கை ரக்பி ஜாம்பவான் சந்திரிஷன் பெரேரா இன்று காலமானார்.
நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் அவர் இன்று அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர் இலங்கை ரக்பி அணியின் தலைவர், பயிற்சியாளர், உடற்பயிற்சி பயிற்சியாளராக செயற்பட்டுள்ள நிலையில், ஊடகவியலாளர் மற்றும் வர்ணனையாளராகவும் செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேபோல், 1992 இல் இலங்கை கிரிக்கெட் அணியின் உடற்பயிற்சி பயிற்சியாளராகவும், அந்த அணியின் ஊடக மேலாளராகவும் பணியாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.



