பிரான்ஸில் கொரோனா வைரஸ் : தற்போதைய நிலவர விபரம்
#world_news
#Covid 19
#France
Mugunthan Mugunthan
3 years ago

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் பதிவான தொற்று மற்றும் சாவு விபரங்களை தற்போது சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
6, 366 பேருக்கு இந்த 24 மணிநேரத்தில் புதிதாக தொற்றுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரான்சில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 7, 114, 572 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்று வீதம் மூன்றாவது நாளாக 1.3% ஆக உள்ளது.
மருத்துவமனையில் 6, 400 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 1, 010 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேவேளை, இந்த 24 மணிநேரத்தில் 35 பேர் மருத்துவமனைகளில் சாவடைந்துள்ளனர். மொத்த சாவு எண்ணிக்கை 117, 440 ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் 90, 566 பேர் மருத்துவமனைகளில் சாவடைந்துள்ளனர்.



