வீட்டுச் சுவரில் சிக்கி குழந்தை பலி!
Prabha Praneetha
3 years ago

பல்லம, கட்டுபொல பிரதேசத்தில் வீடொன்றின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
குழந்தை இடிந்து விழுந்து சுவரில் சிக்குண்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
12 வயதுடைய பிள்ளை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
சடலம் சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பல்லம பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



