அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: நான்கு பேர் பலி
#world_news
#United_States
Mugunthan Mugunthan
4 years ago
அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள நகரம் தகோமா. இங்குள்ள ஒரு வீட்டில் திடீரென துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பெண்கள், ஒரு ஆண் என மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஒருவர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பம் நடைபெற்றபோது அந்த வீட்டின் முன் ஒருவர் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
குற்றவாளியை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். குற்றவாளி கைது செய்யப்படாததால், வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவேணடாம் என போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.