பொறுப்பற்ற லம்போ சுவிஸ் சாரதி சிறையில் அடைக்கப்பட்டார்
#world_news
#Switzerland
Mugunthan Mugunthan
4 years ago
ஒரு லம்போர்கினி சாரதி ஏறத்தாழ ஒரு சைக்கிள் ஓட்டுபவரை முந்திச்செல்லும் போது கொன்றதனால் 4 வருட சிறைக்கு செல்லவுள்ளார்.
25 வயதான இ்ந்த சாரதி சோலாத்துான் மாகாணத்தில் டோர்னாச்சில் ஒரு பயிற்சி ஓட்டத்தில் சுப்பர் காரை செலுத்திக்கொண்டிருந்தார். ஒரு சிறிய சாலையில் போக்குவரத்து வரிசையில் அவர் ஒரு குருட்டு வளைவில் இரண்டு கார்களை முந்திச் செல்ல முயன்றுள்ளார்.
சாலையின் மறு புறத்தில் இருந்த சைக்கிள் ஓட்டுனரை அவர் தாக்கி பலத்த காயத்திற்குள்ளாக்கினார். நீதிமன்றத்தின் படி சைக்கிள் ஓட்டுபவர் வாழ்கையை மாறறும் விளைவுகளை அனுபவிக்கிறார்.
சாரதி தரப்பு 12 மாத இடைநீக்கம் செய்யப்பட்ட தண்டனையை கேட்ட போதிலும், நீதிமன்றம் அவருக்கு 3 வருட மற்றும் 8 மாத சிறை தண்டனை விதித்துள்ளது.
சாரதிக்கு மேல்முறையீட செய்ய இன்னும் உரிமை உள்ளது.