சொந்தமாக சமூக வலைதளத்தை தொடங்கினார் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்!

#world_news #United_States
சொந்தமாக சமூக வலைதளத்தை தொடங்கினார் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் சொந்தமாக சமூக வலைதளத்தை தொடங்கினார். தனது டிரம்ப் மீடியா& டெக்னாலஜி குரூப் நிறுவனம் சார்பில் “ ட்ரூத் சோஷியல்” என்ற வலைதளத்தை டிரம்ப் இன்று தொடங்கியுள்ளார். இந்த சமூக வலைதளத்திற்கு “ட்ரூத் சோஷியல்” என பெயரிடப்பட்டுள்ளது.

“ட்ரூத் சோஷியல்” ஆப் அமெரிக்கா முழுவதும் முதல்காலாண்டில்  வெளியாக வாய்ப்பு என டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும் ஆப்பில் ஸ்டோரில் “ ட்ரூத் சோஷியல்” ஆப் வெளியிடப்பட்ட நிலையில் பீட்டா பதிப்பு நவம்பரில் வெளியிடப்படுகிறது.

சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டுவந்ததால் டிரம்பின் கணக்குகளை டுவிட்டர், முகநூல் நிறுவனங்கள் முடக்கிய நிலையில் சொந்தமாக சமூக வலைதளத்தை அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் இன்று தொடங்கியுள்ளார். 
 
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!