அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அதிகாரிகளாக 3 இந்தியர்கள் நியமனம் பெற்றுள்ளனர்.
#world_news
#United_States
Mugunthan Mugunthan
4 years ago
அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரபூர்வ இல்லமான வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் பணியாற்றுவது என்பது கவுரமிக்கதாக கருதப்படுகிறது.
இந்த வெள்ளை மாளிகையில் ஒரு வருட காலம் ‘பெலோஷிப்’ திட்டத்தின்கீழ் அதிகாரிகளாக பணியாற்றுவதற்கு வளர்ந்து வருகிற 19 இளைய தலைமுறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 3 பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
ஜாய் பாசு, சன்னி படேல் ஆகிய இருவரும் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். மற்றொருவர் நியூஜெர்சி மாகாணத்தை சேர்ந்த ஆகாஷ் ஷா.
ஜாய் பாசு, வெள்ளை மாளிகை பாலின கொள்கை கவுன்சிலில் பணியாற்றுவார். சன்னி படேல், உள்நாட்டு பாதுகாப்பு துறையில் பணியாற்றுவார். ஆகாஷ் ஷா சுகாதாரம், மனித சேவைகள் துறையில் அதிகாரியாக இருப்பார்.