கனடாவில் நீர்வீழ்ச்சியிலிருந்து நபரை தனது தலைப்பாகையால் காப்பாற்றிய சீக்கியர்.
#world_news
#Canada
Mugunthan Mugunthan
3 years ago

கனடாவில் பாறைகள் நிறைந்த நீர் வீழ்ச்சியில் இளைஞர் ஒருவர் தவறி விழுந்த போது தலைப்பாகை ஒன்றால் காப்பாற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கனடாவில் உள்ள கோல்டன் ஏர்ஸ் அருவிப் பகுதியில் இளைஞர் ஒருவர் தவறி விழுந்துள்ளார்.
அதன்போது தன்னைக் காப்பாற்றுமாறு கூச்சலிட்டுள்ளார். அதன்போது அந்த வழியாக சென்ற சீக்கியர்கள் தங்கள் அணிந்திருந்த தலைப்பாகையினை அவிழ்த்து அதனை கயிறு போல கட்டி இளைஞரை நோக்கி வீசியுள்ளனர்.
அதனைப்பிடித்து அந்த இளைஞன் மேலே ஏறி வந்துள்ளார்.



