பிரான்ஸில் - கணவர் ஒருவர் தனது மனைவியை சுட்டுக்கொன்றுவிட்டு தாமும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
#world_news
#France
Mugunthan Mugunthan
4 years ago
இச்சம்பவம் மார்செயின் 15 ஆம் வட்டாரத்தில், இன்று புதன்கிழமை அதிகாலை 3 மணிக்கு இடம்பெற்றுள்ளது. இங்கு வசிக்கும் 71 வயதுடைய ஒருவரே தனது 69 வயதுடைய மனைவியை சுட்டுக்கொன்றுள்ளார். உடல்நலம் குறைவாக மிகவும் அவதியுற்றுக்கொண்டிருந்த மனைவியை காண முடியாமல், அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளார்.
அறையின் கட்டிலில் இருந்து மனைவியின் சடலத்தையும், குளியலறையில் இருந்து கணவரின் சடலத்தையும் காவல்துறையினர் மீட்டனர்.
இதில் கணவர் தனது வாய்க்குள் துப்பாக்கியை வைத்து மேல்பக்கமாக சுட்டுள்ளார். தலை சிதிலமடைந்த நிலையிலேயே கணவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.
9 மி.மீ கலிபர் வகை துப்பாக்கி சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்டது. மனைவி நோயில் துன்புறுவதை தாங்க முடியாமல் இச்செயலில் ஈடுபட்டதாக கணவர் கடிதம் ஒன்றை விட்டுச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.