யூரோ மில்லியன் ! - பிரெஞ்சு நபருக்கு அடித்த வரலாறு காணாத அதிஷ்ட்டம்!!

ஐரோப்பாவின் மிகப்பெரிய அதிஷ்ட்டலாப சீட்டானா யூரோ மில்லியனில், பிரெஞ்சு நபர் ஒருவர் வரலாறு காணாத அதிஷ்ட்டத்தை பெற்றுள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற யூரோமில்லியன் வெற்றி இலக்கமான 21-26-31-34-49 இலக்கத்துடன் அதிஷ்ட்ட இலக்கமான 2 மற்றும் 5 ஆகிய இலக்கங்களை பிரெஞ்சு நபர் ஒருவர் பெற்றுக்கொண்டுள்ளார். அவருக்கு அடித்த அதிஷ்ட்டாத்தின் மொத்த பரிசுத்தொகை 220 மில்லியன் யூரோக்களாகும். யூரோமில்லியன் அதிஷ்ட்டலாபச்சீட்டு ஆரம்பித்த காலத்தில் இருந்து தனி ஒரு நபர் இந்த அளவு தொகையை முன்னர் எப்போதும் பெற்றுக்கொண்டதில்லை.
வெற்றி பெற்ற நபர் குறித்த தகவல்கள் பாதுகாப்பு கருதி வெளியிடப்படவில்லை. இதே சீட்டெழுப்பில் மற்றுமொரு பிரெஞ்சு நபர் நான்கு மில்லியன் யூரோகளும் மேலும் ஆறு ஐரோப்பியர்களுக்கும் பரிசுத்தொகையை பெற்றுக்கொண்டுள்ளனர்.
யூரோமில்லியன் சிட்டெழுப்பில் இதற்கு முன்னதாக தனி ஒருவர் பெற்றுக்கொண்ட அதிகபட்ச தொகை 210 மில்லியன் யூரோக்கள் ஆகும். இவ்வருடத்தின் பெப்ரவரி 26 ஆம் திகதி சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒருவர் இந்த பரிசுத்தொகையை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.



