சுவிற்சலாந்தில் பள்ளி அருகே போலி துப்பாக்கியுடன் ஒரு நபர் நிறுத்தப்பட்டார்
#world_news
#Switzerland
Mugunthan Mugunthan
3 years ago

சுவிற்சலாந்து ஜெனீவாவில் ஒரு நபர் ஒரு பள்ளியின் அருகே கையில் துப்பாக்கியும், பெல்ட்டில் கத்தியும் வைத்திருப்பதைக் கண்டு சோதனை செய்யப்பட்டது.
கொலொங்க்-பெல்லரைவ் அருகே ஒரு தனியார் பாதுகாப்பு ரோந்து மூலம் அவர் கண்டு பிடிக்கப்பட்டு தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பொலீஸை அழைத்தனர்.
53 வயதான அந்த நபர் ஏற்கனவே தங்களுக்கு தெரிந்தவர் என்று பொலீசார் கூறுகின்றனர். அவர்கள் கத்திகள் மற்றும் பல பிரதி ஆயுதங்களை அவரிடம் கைப்பற்றினர்.
குற்றம் இல்லை என்று பலீசார் கூறுவதால் அவர் கைது செய்யப்படவில்லை.



