தொடுவானம்' என்ற புதுக் கட்சி தொடங்கினார் எத்துவா பிலிப்! மக்ரோனின் தலைமைக்கு ஆதரவு

#world_news #France
தொடுவானம்' என்ற புதுக் கட்சி தொடங்கினார் எத்துவா பிலிப்! மக்ரோனின் தலைமைக்கு ஆதரவு

பிரான்ஸின் முன்னாள் பிரதமரும் லூ ஹாவ்(Le Havre)நகரத்தின் மேயருமாகிய எத்துவா பிலிப் "Horizons" என்னும் பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடக்கியுள்ளார்.

'தொடுவானம்' என்ற அர்த்தத்திலான அக் கட்சியின் கொள்கைகளை விளக்குகின்ற முதலாவது  கூட்டத்தை அவர் நேற்று லூ ஹாவ் நகரத்தில் பெரும் எண்ணிக்கையான ஆதரவாளர்கள் முன்பாக நடத்தினார்.

பிரான்ஸின் பாரம்பரிய வலது, இடது சார்புக் கட்சிகள் வலுவிழந்து வருகின் றன."En Marche "என்ற அரசியல் இயக்கத்தை ஆரம்பித்து 2017 இல் நாட்டின் அதிபராக முடி சூடியவர் மக்ரோன். அவர் பதவிக்கு வந்ததும் தனது புதிய அரசாங்கத்தின் பிரதமராக எத்துவா பிலிப்பை நியமித்தார். முன்னாள் வலது சாரி (UMP) உறுப்பினரான எத்துவா பிலிப் கடந்த 2020 ஜூலை வரை அப்பதவியில் இருந்தார்.

பிரதமராகப் பதவி வகித்த சமயத்தில் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிகுந்த தலைவராக விளங்கியதைக் கணிப்புகள் வெளிப்படுத்தி இருந்தன. சில சந்தர்ப்பங்களில் அரசுத் தலைவர் மக்ரோ
னை விடவும் அவருக்கு செல்வாக்கு அதிகமாக இருந்ததுண்டு.

"நல்லதைச் செய்வதற்கான தொலை நோக்கு" என்பதைத் தனது தொடுவானம் கட்சியின் மகுட வாக்கியமாக அறிவித்திருக்கிறார் பிலிப்.அதிபர் தேர்தலில் போட்டியிடப்போகிறார் என்று வெளியாகிய ஊகங்களை அவர் நிராகரித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மக்ரோனுக்கே தனது பகிரங்க
ஆதரவை வெளிப்படுத்தியுள்ள அவர் தனது புதிய கட்சி மக்ரோனின் வாக்குப் பலம் மிக்க வெற்றிக்காக உழைக்கும் என்று அறிவித்திருக்கிறார்.

ஓய்வு பெறும் வயதை படிப்படியாக 67வரை அதிகரித்தல், வேலை நேரத்தைக்கூட்டுதல் எனப் பல திட்டங்களை இலக்  குகளாக அவரது கட்சி வெளியிட்டிருக்கிறது.
இதேவேளை, அதிபர் தேர்தல் களத்தில் மரின் லூ பென் அம்மையாருக்குப் போட்டியாக எரிக் செமூர் என்ற புதிய தீவிர வலது சாரி முகம் அறிமுகமானதைத்தொடர்ந்து அரசியல் களம் நாளாந்தம்
சூடுபிடித்து வருகிறது.

எரிக் செமூர் மரின் லூ பென்னை முந்திக் கொண்டு அதிபர் தேர்தலின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறக் கூடிய நிலைமை காணப்படுவதாகக் கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன.ஆனால் தேர்தலில் போட்டியிடுகின்ற முடிவை அவர் இன்னமும் அறிவிக்கவில்லை. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!