எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை
Prabha Praneetha
3 years ago

தற்போதைய நிலையில் எரிபொருள் விலையை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 70 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



