அவதானம்! - பிரான்ஸில் ஒக்டோபர் 15 முதல் PCR முடிவுகள் செல்லுபடியாகாது!

#world_news #France
அவதானம்! -  பிரான்ஸில் ஒக்டோபர் 15 முதல் PCR முடிவுகள் செல்லுபடியாகாது!

இம்மாதம் 15 ஆம் திகதி முதல் PCR முடிவுகளை சுகாதார பாஸ் (pass sanitaire) ஆக பயன்படுத்த முடியாது என அரசு அறிவித்துள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை இந்த அறிவித்தலை சுகாதார அமைச்சகம் ஊடக அறிக்கை மூலம் அறிவித்துள்ளது. இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் மூன்று நாளைக்குட்பட்ட PCR அறிக்கைகளை (எதிர்மறை முடிவுகளுடன் கூடிய) பயன்படுத்த கூடியவாறு இருந்தது.

ஆனால் வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி முதல் இந்த நடைமுறை நீக்கப்படுகின்றது. சுகாதார பாசுக்கு மாற்றாக PCR அறிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் இன்னும் 5.9 மில்லியன் வயதுவந்தோர் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை எனவும் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!