பிரான்ஸ்-பரிஸில் கோர விபத்து! - ஏழு பேர் வரை காயம்..! இருவர் கவலைக்கிடம்

#world_news #France
பிரான்ஸ்-பரிஸில் கோர விபத்து! - ஏழு பேர் வரை காயம்..! இருவர் கவலைக்கிடம்

பிரான்ஸ் பரிஸில் இடம்பெற்ற கோர விபத்தில் ஏழு பேர் வரை காயமடைந்துள்ளனர். இருவர் பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் உள்ள Boulevard Rochechouart பகுதியில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது. Barbès மெட்ரோ நிலையம் அருகே பயணித்த வாகனம் ஒன்று விபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தடத்தில் இருந்து மற்றொரு தடத்துக்கு செல்ல முற்பட்ட குறித்த வாகனம், பேருந்து ஒன்றுடன் மோதியது. இதனால் பேருந்து வீதியில் இருந்து பாதசாரிகள் நடைபாதையில் ஏறியது. அத்தோடு கார் ஒன்றும் இந்த விபத்தில் தொடர்புபட்டுள்ளது.

பகல் 2.30 மணி அளவில் நடந்தஇந்த விபத்தில் மொத்தமாக ஏழு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடி வருகின்றனர்.  
 
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!