சுவிற்சலாந்து - சூரிச் தெருவில் இருந்து காலநிலை ஆர்வலர்களை பொலிஸார் அகற்றினர்!

சூரிச்சின் மையத்தில் அழிவு கிளர்ச்சியின் காலநிலை ஆர்வலர்கள் நேற்று மூன்று சந்திகளை தடுத்து, காலநிலை அவசர நிலையை அறிவிக்குமாறு அரசாங்கத்தைக் கோரினர். இந்த அங்கீகரிக்கப்படாத ஆர்ப்பாட்டத்தை முறியடிக்க பொலிஸார் சென்றனர்.
சுவிஸ் ஊடகமொனற்று தெரிவிக்கையில் பிரெஞ்சு மொழி பேசும் சுவிற்சலாந்தை சேர்ந்த சுமார் 200 ஆர்வலர்கள், போக்குவரத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன், முக்கிய நிலையத்திலிருந்து சிறிது தொலைவில் உள்ள ஊரேனாஸ்ட்ரேஸின் நடுவில் அமர்ந்திருந்தனர்.
அவர்கள் நடுத்தெருவில் ஒரு படகை அமைத்து, நாங்கள் வாழ விரும்புகிறோம். இப்போது செயல்படுங்கள், அறியவிலை கேளுங்கள், மற்றும் நாங்கள் நாளை மீண்டும் அங்கு இருப்போம் என்று பதாதைகளை அசைத்தனர்.
நகர பொலிஸார் அந்த பகுதியை சுற்றி வளைத்து, ஆர்ப்பாட்டக்காரங்களை வெளியேற்ற இறுதி எச்சரிக்கை கொடுத்தனர். பொலிஸார் நடைபாதைக்கு ஆர்பாட்டக்காரர்களை துாக்கி சென்றனர். இவ்வாறு அகற்றப்படுவதை ஆர்வலர்கள் எதிர்க்கவில்லை.



