இலங்கையில் வருகிறது புதிய சட்டம் !
#SriLanka
#wedding
#Covid Vaccine
Yuga
3 years ago

கொரோனா தடுப்பூசி இரண்டையும் பெற்றுக்கொள்ளாத எந்தவொரு நபருக்கும் ஒக்டோபர் 31ஆம் திகதிக்கு பின்னர் திருமண நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு அனுமதி வழங்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ,தற்போது 50 பேரின் பங்குபற்றுதலுடன் திருமண நிகழ்வுகளை நடத்துவதற்கு கொரோனா ஒழிப்பு செயலணியிடம் அனுமதி பெற்றுள்ளதாக அகில இலங்கை சிறிய மற்றும் மத்திய பரிமாண திருமண சேவை வழங்குனர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அத்துடன், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை கடைபிடிக்காத நபர்களின் வீடுகளில் திருமண நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி வழங்காதிருக்கவும் தீர்மானித்துள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசேகர தெரிவித்தார்.



