சுவிஸ் எயர் ஊழியர்கள் தடுப்பூசி ஏற்ற மறுத்தால், பணிநீக்கம் செய்யப்படுவர்!
#world_news
Mugunthan Mugunthan
3 years ago

சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர் லைன்ஸ் (SWISS) ஊழியர்களுக்கு கோவிட் -19 க்கு எதிராக தடுப்பூசி போடாதவரை ஜனவரி இறுதியில் இருந்து பணிநீக்கம் செய்யப்படுவர் என்று எச்சரித்துள்ளது.
இவர்கள் தடுப்பூசி ஏற்றிக்கொண்டால் குறிப்பாக கொக்பிட் மற்றும் கபின் ஊழியா்கள் ஆறு மாதங்களுக்கு வேலையை நிறுத்திவிட்டு அதற்குள் திரும்பலாம். இவ்வாறு செயதித்தொடர்பாளர் ஒருவர் கூறினார்.
தடுப்பூசி ஏற்ற மறுப்பவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.
தடுப்பூசி போட முடியாததற்கு மருத்துவ காரணங்களை ஊழியர்கள் வழங்க முடிந்தால், தனிப்பட்ட தீர்வுகள் தேவைப்படும், செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.
SWISS இன் படி, கட்டாய தடுப்பூசி தேவைகளுக்கு இணங்கத் தவறினால் வேலை ஒப்பந்தத்தின் கீழ் கடமையை மீறுவதாகும்.



