சுவிற்சலாந்தில் கொவிட் மையங்களை நோக்கி மக்கள் படையெடுப்பு!

சுவிற்சலாந்தில் கடந்த செப்டம்பர் 26ஆம் திகதி நடந்து முடிந்த 24மணி நேரத்தில் வைத்தியசாலை அனுமதிகளாக 586 பேரும், அதில் தீவிர சிகிச்சை பிரிவில் 210 பேரும் அடங்குவர். அன்று இறப்புக்கள் ஏதும் நிகழவில்லை.
இதே வேளை கொவிட் சான்றிதழ் பரிசோதனைக்காக மக்கள் சோதனை மையங்களுக்கு விரைந்து செல்கின்றனர். மத்திய கவுன்சில் சான்றிதழ் தேவையை அறிமுகப்படுத்திய பின்னர் கொரோனா சோதனைகளின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்தது. எதிர்காலத்தில் சோதனைகளுக்கு எவ்வளவு செலவாகும் என்பதைப்பார்க்க வேண்டும்.
உணவகங்கள், தவறணைகள், உடற்பயிற்சி நிலையங்கள் மற்றும் பல நிகழ்வுகளில் கோவிட் சான்றிதழ் கட்டாயமாகிவிட்டதால், சோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை சாதனை அளவை எட்டியுள்ளது. கட்டாய சான்றிதழ் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு ஒவ்வொரு நாளும் 50,000 க்கும் குறைவான நபர்கள் சோதனை செய்யப்பட்டனர், இந்த எண்ணிக்கை இப்போது 95,000 ஆக உள்ளது.
சோதனைகள் இலவசமாக இருந்தால் இந்த எண்ணிக்கை ஒரு நாளைக்கு சுமார் 143,000 ஆக உயரும் என்று சுகாதார அமைச்சர் அலைன் பெர்செட் கருதுகிறார்.



