உறவினர்களுக்கிடையிலான நிலத்தகராறு உயிரைக் குடித்த பரிதாபம்: வீரகெட்டியவில் இது தான் நடந்தது! (Photos)

கீழ்ப்படியாத மனிதாபிமானமற்ற மக்கள் இன்னும் இந்த சமூகத்தில் இருக்கிறார்கள் என்பது கடந்த 19 ஆம் திகதி வீரகெட்டிய கஜநாயக்கம பகுதியில் இடம்பெற்ற துரதிஷ்டவசமான சம்பவத்தின் மூலம் பதிவாகியுள்ளது.
மொஹொட்டிகே திலக் எனடபவரும் மற்றும் 14 வயது சசிந்த நிம்சரவின் தந்தையும் ஒரே சகோதரர்களின் பிள்ளைகள்.
வீரகெட்டிய கஜநாயக்கமவில் ஒரே கிராமத்தில் வசிக்கும் இந்த இரண்டு குடும்பங்களுக்கு இடையே சில காலமாக நிலம் தொடர்பாக சில தகராறுகள் இருந்தன.அது சாம்பலில் உள்ள நெருப்பு போல அணையாமல் இருந்துள்ளது.
இரு குழுக்களும் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் அவர்களால் நிலத் தகராறைத் தீர்க்க முடியவில்லை.

இதனால் மொஹொட்டிகே திலக் கோபமடைந்தார்.
இதனையடுத்து மொஹொட்டிகே திலக் உள்ளிட்ட குழுவினர் 2021.09.19. ம் திகதி நேரம் இரவு 10 மணியளவில் சசிந்தவின் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதன்போது திலக் உடன் ஐந்து அல்லது ஆறு பேர் இருந்தனர்.
நடந்து செல்லும் தூரத்தில் உள்ள சசிந்தவின் வீட்டின் அருகே வந்த திலக், சசிந்தவின் தந்தையை நோக்கி கத்த ஆரம்பித்தார்.
இரண்டு குழுக்களுக்கிடையிலான இந்த சண்டை கிராம மக்களுக்கும் அவ்வளவு விசித்திரமாக இல்லை.
இவர்கள் போட்ட கூச்சலில் 14 வயது சசிந்த மற்றும் பிற வீட்டிலுள்ளோர் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வந்து என்ன குழப்பம் என்று பார்த்துள்ளனர்.

வாக்குவாதம் சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது. யாரும் யாருக்கும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை.
இருவரில் ஒருவர் இன்று காப்பாற்றப்பட வேண்டும். என்று உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் திலக் வந்திருந்தார்.
வாக்குவாதம் தொடர்ந்தபோது, பொறுமை இழந்த திலக், சசிந்தவின் தந்தையை இங்கே கொன்றுவிடுவதாக கூறி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதனையடுத்து அங்கிருந்த 14 வயதான சிறுவன் சசிந்த தரையில் விழுந்தார்.
திலக் உள்ளிட்ட குழுவினர் தங்கள் இலக்கு தவறாக நடந்ததால் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
சசிந்தவின் தந்தையும் தாயும் வீரகெட்டிய மருத்துவமனைக்கு மகனைக் கொண்டு சென்றனர். ஆனால் சசிந்த ஏற்கனவே இறந்துவிட்டார்.
தந்தை மீது குறி வைக்கப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 14 வயது சசிந்த நிம்சர பலியானார்.19 ஆம் திகதி இரவு 10.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்தது.
பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, மூன்று சந்தேக நபர்கள் 20 ஆம் திகதி காலை தங்கள் வீடுகளில் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டனர். முக்கிய சந்தேகநபர் உட்பட மற்றொரு சந்தேக நபர் அந்த பகுதியை விட்டு தப்பியோடிவிட்டனர்.
அதன்படிஇ சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரான சுஹ்தா என்ற மொஹொட்டிகே திலக் மற்றும் வீபது மொஹந்திரமகே ஜீவசிறி ஆகியோர் 22 ஆம் திகதி காலை கோனஹேன பகுதியில் உள்ள தேக்குக் காட்டில் மறைந்திருந்தபோது கைது செய்யப்பட்டனர்.

பேரழிவு தரும் உலகளாவிய தொற்றுநோயிலிருந்து தப்பிக்க பலர் போராடி வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் ஒரே குடும்பத்தின் அதே உறவினர்களை மனம் இல்லாமல் காட்டு மக்கள் போல் ஒரு நிலத்திற்காக சுட்டுக் கொல்லும் அளவுக்கு மனித குணங்கள் மோசமடைந்துள்ளன என்பது தெளிவாகிறது.
முழு நாட்டிற்கும் உலக மக்களுக்கும் வாழ்க்கையைப் பற்றி யதார்த்தமாக சிந்திக்க இயற்கை நேரம் கொடுத்ததுஇ ஆனால் அதைப் பற்றி கவலைப்படாதவர்கள் இன்னும் இந்த சமூகத்தில் இருப்பது துரதிர்ஷ்டவசமானது.



