வவுனியாவில் மேலும் அறுவர் கொரோனாவால் மரணம்!
#Covid 19
#Corona Virus
#Death
#Vavuniya
Prathees
3 years ago

வவுனியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொரோனாத் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த, தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த மற்றும் தொற்றுக்குள்ளான நிலையில் வீடுகளில் இருந்தோர் என 6 பேர் மரணமடைந்துள்ளனர்.
வவுனியா செட்டிகுளத்தில் ஆண் ஒருவரும் (வயது 80), கன்னாட்டி கணேசபுரத்தில் ஆண் ஒருவரும் (வயது 77), கந்தசாமி கோவில் வீதியில் பெண் ஒருவரும் (வயது 91), தேக்கவத்தை பகுதியில் பெண் ஒருவரும் (வயது 74), தோணிக்கல் பகுதியில் ஆண் ஒருவரும் (வயது 83), சிவபுரம் பகுதியில் ஆண் ஒருவரும் (வயது58) உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், மரணித்த 6 பேரினதும் உடல்களையும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.



